திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் அ.தி.மு.க. பெண் பிரமுகர் பலி

சிறுவனூர் அருகே ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென நிலை தடுமாறிய தேவி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த தேவியை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் அ.தி.மு.க. பெண் பிரமுகர் பலி
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூர், நேதாஜி சாலையை சேர்ந்தவர் தேவி (வயது44). இவர் அ.தி.மு.க.வில் திருவள்ளூர் நகர இணை செயலாளராக இருந்தார். கடந்த 8-ந்தேதி தேவி, உறவினரான அறிவு செல்வன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பூண்டியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

சிறுவனூர் அருகே ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென நிலை தடுமாறிய தேவி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த தேவியை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தேவி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com