கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு- அமைச்சர் பொன்முடி பேட்டி

ஆன்லைன் தேர்வுகள் நடக்காத நாட்களில் மாணவர்கள் கல்லூரிக்கு வர வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி
Published on

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாணவர்களின் நலன் கருதி செய்முறை தேர்வுகளுக்காக வருகிற 1-ந்தேதி கல்லூரிகள் திறக்கப்படுகிறது.

கல்லூரிகள் திறந்தாலும் ஏற்கனவே அறிவித்தபடி 1, 3, 5-வது செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும். இதில் மாணவர்கள் யாரும் குழப்பம் அடைய வேண்டாம்.

ஆன்லைன் தேர்வுகள் நடக்காத நாட்களில் மாணவர்கள் கல்லூரிக்கு வர வேண்டும். தமிழகத்தில் இருமொழி கொள்கை தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com