கடலூர் அருகே 34 பேருக்கு வீட்டு மனை பட்டா- மேயர் சுந்தரி ராஜா வழங்கினார்

கடலூர் மாநகராட்சி மேயர் வெள்ளப்பாக்கம் கிராமத்திற்கு நேரில் சென்று உங்கள் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டத்தில் கோரிக்கை மனு வழங்கிய அடிப்படையில் 34 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார்.
வீட்டு மனை பட்டா  வழங்கிய மேயர் சுந்தரி ராஜா
வீட்டு மனை பட்டா வழங்கிய மேயர் சுந்தரி ராஜா
Published on

கடலூர்:

கடலூர் அருகே வெள்ளப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ற கூட்டம் நடைபெற்றபோது மனைபட்டா வேண்டி கோரிக்கை மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி அவர்களுக்கு மனைபட்டா வழங்க உத்தரவிட்டனர்.

அதன்படி கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா வெள்ளப்பாக்கம் கிராமத்திற்கு நேரில் சென்று உங்கள் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டத்தில் கோரிக்கை மனு வழங்கிய அடிப்படையில் 34 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார்.

அப்போது அவர் கூறுகையில், உங்கள் பகுதியில் எந்தவித குறைகளும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போன்றவற்றை குறித்து தெரிவித்தால் உடனடியாக அதிகாரியிடம் தெரிவித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும் என தெரிவித்தார். அப்போது மாநகராட்சி மண்டல குழு தலைவர் இளையராஜா, கிராம நிர்வாக அலுவலர் சரளா, திமுக நிர்வாகிகள் மஸ்கட் புகழேந்தி, ஜெயசீலன், லெனின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com