மார்த்தாண்டத்தில் மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பலி

மார்த்தாண்டம் அருகே லாரிக்கு கிரீஸ் அடித்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி டிரைவர் பலியானார்.
மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பலி
மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பலி
Published on

குழித்துறை:

மார்த்தாண்டத்தை அடுத்த காஞ்சிரக்கோடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் சிங் (வயது 48).

இவர் மார்த்தாண்டம் பகுதியில் வாகனங்களுக்கு கிரீஸ் அடிப்பது, பேட்டரி மாற்றுவது போன்ற வேலைகளை செய்து வந்தார்.

தினமும் காலையில் இவரது கடைக்கு வாகனங்கள் கிரீஸ் மாற்றுவதற்கு கொண்டு வரப்படும். இன்று காலையில் செல்வராஜ் (42) என்பவர் டிப்பர் லாரி ஒன்றுக்கு கிரீஸ் அடிக்க கொண்டு வந்தார்.

டிரைவர் செல்வராஜ் மற்றும் கிளீனர் டேனி ஆகியோர் சேர்ந்து டிப்பர் லாரிக்கு கிரீஸ் அடித்தனர். இறுதியில் லாரியின் கீழ் பகுதியில் கிரீஸ் அடிக்க லாரியின் மேல் பகுதியை உயர்த்தினர்.

அப்போது லாரியின் மேல் பகுதி அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின் கம்பி மீது எதிர்பாரதவிதமாக உரசியது.

இதில் மின்சாரம் தாக்கி டிரைவர் செல்வராஜ் தூக்கி வீசப்பட்டார். அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார். அவருடன் இருந்த கிளீனர் டேனி மீதும் மின்சாரம் தாக்கியது. அவரும் தூக்கி வீசப்பட்டார். உடல் கருகி உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் இன்று காலை மார்த்தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com