மரக்காணத்தில் ஆசிரியர் வீட்டில் தீ விபத்து- நகை- பணம் எரிந்து சேதம்

மரக்காணத்தில் ஆசிரியர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் நகை- பணம் எரிந்து சேதம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீ
தீ
Published on

மரக்காணம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள தேவா கோட்டஸ் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆதிமூலம். ஓய்வு பெற்ற ஆசிரியர்.

இவர் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிக்கொண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யூர் வட்டம் வில்லிவாக்கம் கிராமத்தில் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சிக்கு சென்றார்.

அப்போது ஆதிமூலத்துக்கு பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் செல்போன் மூலம் உங்கள் வீட்டில் புகை வருவதாக கூறினார்கள். அதிர்ச்சி அடைந்த ஆதிமூலம் ஊருக்கு உடனே புறப்பட்டார்.

தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்து மின்சாரத்தை துண்டித்தனர்.

சிலமணி நேரத்தில் ஆதிமூலம் தனது வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த டிவி, பிரிட்ஜ், கட்டில், வாஷிங் மெஷின், மிக்ஸி, பீரோ, கட்டில், ரொக்கம் பணம் ரூ3 லட்சம், 15 பவுன் நகை செயின் ஆகியை தீயில் எரிந்து நாசமானது.

மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com