மப்பேடு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி

பலத்த காயமடைந்த குமாருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மப்பேடு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி
Published on

திருவள்ளூர்:

காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரபாணி (வயது37). இவர் மோட்டார் சைக்கிளில் உறவினர் குமார் என்பவருடன் பேரம்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

இருளஞ்சேரி அருகே வந்த போது எதிரே பேரம்பாக்கத்தில் இருந்து தக்கோலம் நோக்கி சென்ற கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த சக்கரபாணி, குமார் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதில் சக்கரபாணி பரிதாபமாக இறந்தார். பலத்த காயமடைந்த குமாருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com