மனைவி ரிமோட் தர மறுப்பு: டி.வி.யில் விரும்பிய நிகழ்ச்சியை பார்க்க முடியாததால் கணவர் தற்கொலை

கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர். தற்கொலை குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனைவி ரிமோட் தர மறுப்பு: டி.வி.யில் விரும்பிய நிகழ்ச்சியை பார்க்க முடியாததால் கணவர் தற்கொலை
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரை சேர்ந்தவர் ஆசீர்வாதம் (வயது40). தொழிலாளி. இவரது மனைவி நிஷா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இரவு கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆசீர்வாதம் தான் விரும்பிய வேறு ஒரு நிகழ்ச்சியை பார்க்க டி.வி. சேனலை மாற்றுமாறு கூறினார். மேலும் மனைவியிடம் இருந்த ரிமோட்டையும் கேட்டார். ஆனால் அவரது மனைவி நிஷா டி.வி. ரிமோட்டை கொடுக்க மறுத்து அவர் பார்த்து கொண்டு இருந்த டி.வி. நிகழ்ச்சியையும் மாற்ற மறுத்தார்.

இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆசீர்வாதம் அறையில் இருந்து வெளியே வந்து மகனை தாக்கியதாக தெரிகிறது. இதனால் மனைவியுடன் மீண்டும் மோதல் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து கோபித்துக் கொண்ட ஆசீர்வாதம் பெரும்பாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இதேபோல் அவரது மனைவி நிஷாவும் கொண்டஞ்சேரியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். இந்தநிலையில் வீட்டுக்கு திரும்பி வந்த ஆசீர்வாதம் திடீரென அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் இந்த விபரீத முடிவை எடுத்து இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com