பெற்றோர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

மதுரையில் செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

அவனியாபுரம்:

மதுரை அவனியாபுரம், காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த யாஷிக் முகமது. எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் காண்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார். இவரது மகள் சர்மிளா பானு (வயது15) மதுரையில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் படிப்பு வருகிறார்.

இவர் வீட்டில் இருக்கும் போது அடிக்கடி செல்போனை பார்த்து வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த சர்மிளா பானு துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெளியே சென்று வந்த அவரது தாயார் மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அவனியாபுரம் போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com