மதுரை அருகே பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

திருமணம் செய்வதாக ஆசை வார்த்வாதை கூறி மாணவியை கற்பழித்ததாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட மாணவி இதுதொடர்பாக தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.
மதுரை அருகே பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
Published on

மதுரை:

மதுரை மாவட்டம் திருமோகூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், மதுரையில் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை காதலித்து வந்தார். இந்த நிலையில் சிறுவன் அந்த மாணவியை திருமோகூருக்கு அழைத்து வந்தான். அங்கு அவன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்வாதை கூறி மாணவியை கற்பழித்ததாக தெரிகிறது. இதன் விளைவாக அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார்.

பாதிக்கப்பட்ட மாணவி இதுதொடர்பாக தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதன் ஒரு பகுதியாக பிளஸ்-2 மாணவி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதில் அந்த சிறுமியை 17 வயது வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, திருமோகூர் சிறுவனை தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து, அவரிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com