

சென்னை:
சென்னை ஐ.ஐ.டி.யில் ஆராய்ச்சி மாணவி அளித்த பாலியல் புகார் தொடர்பாக சென்னை போலீசாரால் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கிங்ஷீக் தேப் சர்மா மேற்கு வங்காளத்தில் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் அவர் முன்ஜாமின் பெற்று இருந்ததால் அம்மாநில கோர்ட்டு அவரை விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தனக்கு அம்மை நோய் இருப்பதாக தெரிவித்ததையடுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கவும் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
இதனால் சென்னையில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றி ஆலோசித்து வருகிறார்கள்.