மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி காதல் தம்பதி பலி

மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி காதல் தம்பதி பலி
Published on

ஆண்டிபட்டி:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள கீழப்புதூரை சேர்ந்த முருகன் மகன் ராஜ்குமார் (வயது28). இவருக்கும் ஆண்டிபட்டி அருகில் உள்ள மணியக்காரன்பட்டியை சேர்ந்த மரியாள் என்பவரும் கடந்த 1 வருடத்திற்கு முன்பு காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் தீபாவளியை தனது மாமியார் வீட்டில் கொண்டாடுவதற்காக மனைவி மரியாளுடன் ராஜ்குமார் கடந்த வாரம் மோட்டார் சைக்கிளில் ஆண்டிபட்டி மெயின்ரோட்டில் வந்துகொண்டிருந்தார். திம்மரசநாயக்கனூர் முருகன் கோவில் அருகே வந்தபோது எதிரே குமுளியில் இருந்து வந்த லாரி இவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட ராஜ்குமார் மற்றும் அவரது மனைவியின் தலையில் பலத்த காயம் அடைந்து ஆம்புலன்ஸ் மூலம் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் சிகிச்சையில் இருந்த ராஜ்குமார் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் இறந்த செய்தி கேட்டு அவரது மனைவி கதறி அழுத நிலையில் அவரும் இன்று காலை உயிரிழந்தார். காதல் திருமணம் செய்த தம்பதி அடுத்தடுத்து உயிரிழந்தது இரு குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com