சோழவரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து- கண்டெய்னர் லாரி மோதி 2 டிரைவர்கள் பலி

கும்மிடிப்பூண்டியில் இருந்து சோழவரம் நோக்கி வந்த கண்டெய்னர் லாரி திடீரென மோட்டார் சைக்கிளில் மோதியது.சம்பவ இடத்திலேயே முத்தரசனும், செந்தில்குமாரும் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக பலியானார்கள்.
சோழவரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து- கண்டெய்னர் லாரி மோதி 2 டிரைவர்கள் பலி
Published on

செங்குன்றம்:

தஞ்சை மாவட்டம் திருவுடைமருதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்தரசன்(வயது34), செந்தில் குமார்(45). இருவரும் லாரி டிரைவர்கள். இவர்கள் சோழவரத்தில் உள்ள லாரி நிறுத்தும் இடத்தில் தங்கி வேலைபார்த்து வந்தனர்.

நேற்று இரவு அவர்கள் இருவரும் தாங்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

சோழவரம், ஜி.என்.டி, சாலையில் செங்காலம்மன் கோவில் அருகே சென்ற போது, கும்மிடிப்பூண்டியில் இருந்து சோழவரம் நோக்கி வந்த கண்டெய்னர் லாரி திடீரென மோட்டார் சைக்கிளில் மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே முத்தரசனும், செந்தில்குமாரும் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக பலியானார்கள்.

தகவல் அறிந்ததும் செங்குன்றம் போக்குவரத்து புலனாய் பிரிவு போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். கண்டெய்னர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com