சேலம், தருமபுரி மாவட்டங்களில் விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 407 பேரின் லைசென்ஸ் ரத்து

சேலம், தருமபுரி மாவட்டங்களில் கடந்த ஆண்டு அதிக அளவில் விபத்துகளை ஏற்படுத்தி உயிரிழப்புக்கு காரணமான டிரைவர்கள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
லைசென்ஸ் ரத்து
லைசென்ஸ் ரத்து
Published on

சேலம்:

சேலம் மாவட்டத்தில் விபத்துகளை குறைக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் வாகனத்தை போதையில் ஓட்டுவோர், அதிவேகத்தில் செல்வோருக்கு அபராதம் விதித்தும், வழக்கு பதிவு செய்தும் நடவடிக்கை எடுத்த போதும் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக சேலம், தருமபுரி மாவட்டங்களில் கடந்த ஆண்டு அதிக அளவில் விபத்துகளை ஏற்படுத்தி உயிரிழப்புக்கு காரணமான டிரைவர்கள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி கடந்த ஆண்டு 142 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாகவும், 407 பேரின் ஓட்டுனர் உரிமம் நிரந்தரமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com