கோயம்பேட்டில் சிப்ஸ் கடையை உடைத்து ரூ.20 ஆயிரம் கொள்ளை

கல்லா பெட்டியில் இருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்பேட்டில் சிப்ஸ் கடையை உடைத்து ரூ.20 ஆயிரம் கொள்ளை
Published on

கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே உள்ள ஜெய் நகர் மெயின் ரோட்டில் சிப்ஸ் கடை நடத்தி வருபவர் ஜெயபால்.

இவர் நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிச்சென்றார். இன்று காலை வந்தபோது கடையின் ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் இருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com