கோயம்பேடு பஸ்நிலையத்தில் பயணியிடம் நகை திருடிய வடமாநில வாலிபர் கைது

மர்ம நபர் திருடி சென்று இருப்பது தெரிந்தது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான டின்சின் நம்கட் என்பவரை கைது செய்தனர்.
கோயம்பேடு பஸ்நிலையத்தில் பயணியிடம் நகை திருடிய வடமாநில வாலிபர் கைது
Published on

மடிப்பாக்கம், பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர், மனைவி மோகனா மற்றும் 2 வயது மகனுடன் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையம் வந்தார்.

பின்னர் அவர்கள் 2-வது பிளாட்பாரத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர். சிறிது நேரம் கழித்து மோகனா பார்த்தபோது அருகில் வைத்திருந்த 17பவுன் நகை இருந்த கைப்பை மாயமாகி இருந்தது. அதனை மர்ம நபர் திருடி சென்று இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து கோயம்பேடு போலீசில்புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் மற்றும் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து நகை திருட்டில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான டின்சின் நம்கட் (26) என்பவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com