கே.கே.நகரில் படிக்கட்டு பயணத்தை கண்டித்த ஆத்திரத்தில் பஸ் கண்ணாடியை உடைத்த பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.கே.கே நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே.கே.நகரில் படிக்கட்டு பயணத்தை கண்டித்த ஆத்திரத்தில் பஸ் கண்ணாடியை உடைத்த பள்ளி மாணவர்கள்
Published on

பிராட்வேயில் இருந்து மாநகர பஸ் வழித்தடம் எண் 11ஜி நேற்று மாலை பயணிகளுடன் அய்யப்பந்தாங்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் ராமய்யா ஓட்டி சென்றார்.

கே.கே நகர் இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது பள்ளி மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். இதை டிரைவர் ராமய்யா கண்டித்தார். இதனால் ஆத்திர மடைந்த பள்ளி மாணவர்கள் திடீரென பஸ்சில் இருந்து கீழே இறங்கி கைகளால் சரமாரியாக குத்தி பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து கே.கே நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com