

சென்னை:
மத்திய கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன.
பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் இரண்டாம் பருவ தேர்வுகள் நடந்து வருகின்றன. மற்ற மாணவர்களுக்கு புதிய கல்வி ஆண்டு வகுப்புகளும் தொடங்கி விட்டன.
இந்த நிலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மே மாதம் 4ந் தேதியில் இருந்து ஜூன் மாதம் 20ந் தேதி வரை 48 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதே போல் தசரா பண்டிகையையொட்டி அக்டோபர் 3 முதல் 12 வரையிலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டிற்கும் டிசம்பர் 22 முதல் ஜனவரி 1ந் தேதி வரை விடுமுறை விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.