காஞ்சிபுரம் ரவுடி சங்கரின் ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

காஞ்சிபுரம் ரவுடி சங்கரின் ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
காஞ்சிபுரம் ரவுடி சங்கர்
காஞ்சிபுரம் ரவுடி சங்கர்
Published on

சென்னை:

காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் பி.பி.ஜி.டி.சங்கர். பிரபல ரவுடியான இவர் மீது 15 குற்ற வழக்குகள் உள்ளன. மேலும் சட்ட விரோதமாக பணப் பரிவர்த்தனை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சங்கர் மற்றும் அவரது பினாமிகள் பெயரில் இருந்த 79 சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ரவுடி சங்கரின் ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com