கல்பாக்கம் அருகே தாய் மீது கொதிக்கும் எண்ணை ஊற்றிய தந்தைக்கு வெட்டு

கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இருதரப்பு புகாரின் அடிப்படையில் தகராறுக்கான காரணம் குறித்து சதுரங்கபட்டிணம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கல்பாக்கம் அருகே தாய் மீது கொதிக்கும் எண்ணை ஊற்றிய தந்தைக்கு வெட்டு
Published on

கல்பாக்கம் அடுத்த குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 46), வெல்டர். இவரது மனைவி ஸ்ரீதேவி (வயது 37). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சென்று வருகிறார்., இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில், கொதிக்கும் எண்ணையை ஸ்ரீதேவி மீது சுந்தரமூர்த்தி ஊற்றினார்., துடிதுடித்த தாயை மீண்டும் தாக்க முயற்சி செய்த தந்தையை ஆத்திரமடைந்த 16 வயது மகள் வீட்டில் இருந்த அரிவாள் மனையால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இதுகுறித்து இருதரப்பு புகாரின் அடிப்படையில் தகராறுக்கான காரணம் குறித்து சதுரங்கபட்டிணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com