களக்காடு அருகே உர மூட்டைகள் திருடிய 2 பேர் கைது

களக்காடு அருகே உர மூட்டைகள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

நெல்லை:

களக்காடு அருகே உள்ள மூங்கிலடி பகுதியைச் சேர்ந்தவர் டேனியல் (71).இவர் விவசாயம் செய்து வருகிறார். சம்பவத்தன்று சிவபுரத்தில் உள்ள மாதா கோயில் அருகே உள்ள டேனியலின் வயலில் உரம் போட 16 உர முட்டைகள் வைத்திருந்ததார். மறுநாள் 08-ந்தேதி அன்று வந்து பார்த்த போது, அதில் 2 உர முட்டைகளை காணவில்லை.

இதுகுறித்து டேனியல் களக்காடு போலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், விசாரணை மேற்கொண்டதில், மூங்கிலடி பகுதியைச் சேர்ந்த பால்துரை (37) மற்றும் களக்காடு பகுதியை சேர்ந்த ரூபன் (41) ஆகிய இருவரும் சேர்ந்து டேனியல் வைத்திருந்த உர மூட்டைகளில் இருந்து 2 உர முட்டைகளை திருடியது தெரியவந்தது. உடனடியாக போலிசார் பால்துரை மற்றும் ரூபன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com