மேற்கு மாம்பலத்தில் முந்திரி வியாபாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை

கொள்ளை குறித்து ராஜேஷ் கார்த்திக் அசோக் நகர் போலீசில் புகார் அளித்தார்.விரைந்து வந்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளையர்களை பிடிக்க தீவிரமாக தேடிவருகின்றனர்.
மேற்கு மாம்பலத்தில் முந்திரி வியாபாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை
Published on

சென்னை:

சென்னை மேற்கு மாம்பலம் லேக் வியூ சாலை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் கார்த்திக் (வயது37) முந்திரி பருப்பு மொத்த வியாபாரி. இவர் தொழில் சம்மந்தமாக நேற்று முன்தினம் கடலூர் புறப்பட்டு சென்றார். இதையடுத்து ராஜேசின் மனைவி வீட்டை பூட்டி விட்டு அவரது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் ராஜேஷ் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதிலிருந்த 6 பவுன் நகை, 100 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை சுருட்டி சென்றுவிட்டனர். இன்று அதிகாலை சென்னை திரும்பிய ராஜேஷ் தனது வீட்டில் பணம், நகை கொள்ளை போனது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் அசோக் நகர் போலீசில் புகார் அளித்தார். விரைந்து வந்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளையர்களை பிடிக்க தீவிரமாக தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com