இளம்பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திய கள்ளக்காதலன்- திருமணத்திற்கு வற்புறுத்தியதால் ஆத்திரம்

கவிதா, பிரகாஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கள்ளக்காதலியை கத்தியால் குத்திய பிரகாசை தேடி வருகின்றனர்.
இளம்பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திய கள்ளக்காதலன்- திருமணத்திற்கு வற்புறுத்தியதால் ஆத்திரம்
Published on

திருப்பூர்:

திருப்பூர் காமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கவிதா (வயது 35). சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்தபோது அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த ஒரு வாலிபருடன் காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதில் அவர்களுக்கு குழந்தை ஒன்றும் பிறந்தது.

இந்தநிலையில் கவிதாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவரது கணவர் குழந்தையை அழைத்து சென்று விட்டார். கவிதா திருப்பூரில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.

அப்போது நாகப்பட்டினத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கவிதா, பிரகாஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். அதற்கு பிரகாஷ் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

நேற்று இரவு வழக்கம் போல் கவிதாவும் பிரகாசும் சந்தித்து உல்லாசம் அனுபவித்து உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த பிரகாஷ், வீட்டின் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து கவிதாவின் கழுத்தில் குத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த கவிதா சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து சென்றனர்.

பின்னர் கவிதாவை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கள்ளக்காதலியை கத்தியால் குத்திய பிரகாசை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com