மனைவி தற்கொலை செய்த 5 நாளில் கணவரும் மரணம்- தண்டையார்பேட்டையில் பரிதாபம்

திருமணம் ஆகி ஒரு மாதமே ஆன நிலையில் சாமுண்டீஸ்வரி கடந்த 15-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி தற்கொலை செய்து கொண்டதால் ஜெய்சங்கர் சோகத்தில் காணப்பட்டார்.
மனைவி தற்கொலை செய்த 5 நாளில் கணவரும் மரணம்- தண்டையார்பேட்டையில் பரிதாபம்
Published on

ராயப்பேட்டை:

சென்னை தண்டையார்பேட்டை கைலாசம் தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது26).

வடபழனியில் உள்ள தனியார் கியாஸ் சிலிண்டர் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது.

திருமணம் ஆகி ஒரு மாதமே ஆன நிலையில் சாமுண்டீஸ்வரி கடந்த 15-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி தற்கொலை செய்து கொண்டதால் ஜெய்சங்கர் சோகத்தில் காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று மாலை அவர் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே வாயில் நுரை தள்ளியபடி சாலையில் மயங்கி கிடந்தார். இதை அறிந்த அவரது உறவினர்கள் அவரை தண்டையார்பேட்டையில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் விஷம் குடித்து இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மனைவி தற்கொலை செய்த 5 நாளில் கணவரும் இறந்திருப்பது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com