கள்ளக்காதலை கைவிடாததால் இளம்பெண் மரணம்: மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது

கடந்த 20 நாட்களுக்கு முன்பு கவுரிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில் கவுரி நேற்று அதேபகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்காதலை கைவிடாததால் இளம்பெண் மரணம்: மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது
Published on

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை அருகில் உள்ள கோவுகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் கவுரி(22) என்பவருக்கும் சிவக்குமார்(25) என்பவருக்கும் கடந்த 9.9.2021-ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்குபிறகு உடனடியாக குழந்தை வேண்டாம் என குழந்தை பிறப்பை தள்ளிபோட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கவுரிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில் கவுரி நேற்று அதேபகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கவுரியின் தாய் நாகலட்சுமி வடமதுரை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் சிவக்குமாரின் கள்ளக்காதலால்தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். சிவக்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. வளைகாப்பு சமயத்தில் இந்த பிரச்சனை நீடிக்கவே கவுரி சத்தம் போட்டுள்ளார்.

அதற்கு சிவக்குமார் அவ்வாறுதான் இருப்பேன். உனக்கு இஷ்டம் இருந்தால் என்னுடன் சேர்ந்து வாழலாம். இல்லையென்றால் செத்துபோ என கூறியுள்ளார். குழந்தை பிறந்த பிறகு மனைவிக்கு தெரியாமல் தனது வீட்டிற்கு குழந்தையை தூக்கி வந்துள்ளார். அப்போது மீண்டும் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

கவுரியை தற்கொலைக்கு தூண்டும் வகையில் துன்புறுத்தி பேசியதால் அவர் இறந்துவிட்டார் என தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சிவக்குமாருக்கு கள்ளத்தொடர்பு இருந்ததும், தனது மனைவியை கொடுமைப்படுத்தி வந்ததும் உறுதியானது. இதனால் சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com