மனைவியை பீர்பாட்டிலால் தாக்கி தீவைத்த கணவர் கைது

நங்கநல்லூரில் மனைவியை பீர்பாட்டிலால் தாக்கி தீவைத்த கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

நங்கநல்லூர், தில்லை கங்காநகரைசேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது மனைவி வினிதா (வயது28). கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த கமலக்கண்ணன் பீர் பாட்டிலால் மனைவி வினிதாவின் தலையில் தாக்கினார். 

மேலும் அவர் மீது தீ வைத்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவருக்கு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலக்கண்ணனை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com