புதுச்சேரி கடற்கரை சாலையில் போர்வீரர் நினைவிடத்தில் ஹெல்மெட் மாயம்

புதுவை கடற்கரை சாலையில் போர்வீரர் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த ஹெல்மெட் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுவை கடற்கரை சாலையில் போர் வீரர் நினைவு தூணில் ஹெல்மெட் மாயமாகி இருப்பதை காணலாம்
புதுவை கடற்கரை சாலையில் போர் வீரர் நினைவு தூணில் ஹெல்மெட் மாயமாகி இருப்பதை காணலாம்
Published on

புதுச்சேரி:

புதுவை கடற்கரை சாலையில் தலைமை செயலகம் அருகே போர்வீரர் நினைவிடம் உள்ளது. இங்கு போர்வீரர் நினைவு தூண்கள் அமைக்கப்பட்டு நடுவில் தலைகீழாக கவிழ்த்து வைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கி இருக்கும். அந்த துப்பாக்கியின் மேல் ஹெல்மெட் ஒன்று மாட்டி வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை இந்த ஹெல்மெட் மாயமாகி இருந்தது.இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக அவர்கள் பெரியகடை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். நினைவு தூணில் இருந்த ஹெல்மேட்டை மர்ம ஆசாமிகள் யாரோ திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் ஹெல்மெட்டை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். தற்போதும் அதேபோல் மீண்டும் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். தலைமை செயலகத்தில் 24 மணிநேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பார்கள். அப்படியிருக்க அதன் எதிரேயே திருட்டு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com