வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை- தொழிலாளி தப்பி ஓட்டம்

திருவள்ளூர் அருகே வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த கொட்டையூர் பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன். தொழிலாளி.

நேற்று இரவு பரந்தாமன் மதுபோதையில் காரணி, கலைஞர் நகரை சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் 40 வயது இளம்பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். மேலும் அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.

இதனால் பதறிப்போன இளம்பெண் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டதும் பரந்தாமன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து பெண்ணிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட பரந்தாமனை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com