

விழுப்புரம்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல்-அமைச்சரின் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. மற்றும் செங்கல்பட்டு அப்போதைய போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் ஆகியோர் மீது விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கு பதிந்தனர்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாதன் தலைமையில் நடந்து வருகிறது. ஏற்கனவே 6 நாட்கள் விசாரணை நடந்தது.
இன்று 7-வது நாளாக விசாரணை நடந்தது. விசாரணைக்காக இன்று காலை 10.40 மணிக்கு போலீஸ் சூப்பிரண்டு, டி.ஜி.பி. ஆகியோர் நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் ஆஜர் ஆனார்கள். போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் ஆஜர் ஆகவில்லை.
பெண் போலீஸ் சூப்பிரண்டிடம் சிறப்பு டி.ஜி.பி. வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தினர். அப்போது பெண் போலீஸ் சூப்பிரண்டிடம் வக்கீல்கள் சரமாரியாக கேள்வி கேட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.