திருக்கழுகுன்றத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

16 வயது சிறுமிக்கு, முதியவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். இன்ஸ்பெக்டர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அந்தோணியை கைது செய்தார்.
திருக்கழுகுன்றத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது
Published on

மாமல்லபுரம்:

மதுராந்தகத்தை சேர்ந்தவர் அந்தோணி (வயது67). பிரபல தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர்களை சேர்த்து விடும் ஏஜெண்டாக இருந்தார். இவர் திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனியார் நர்சிங் அகாடமி ஒன்றில் பெண்களை சேர்த்து விட வந்தபோது அங்கிருந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.

இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நடராஜன் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அந்தோணியை கைது செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com