காரில் குட்கா கடத்திய வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது- ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

காரில் இருந்தவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். துறையூரில் ஒரே நாளில் சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரில் குட்கா கடத்திய வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது- ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
Published on

துறையூர்:

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதியில் இருந்து காரில் குட்கா கடத்தி வருவதாக துறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து துறையூர் போலீசார் கோவிந்தாபுரம் பிரிவு சாலை அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்பொழுது அந்த வழியாக வந்த காரை நிறுத்துமாறு கூறினர். ஆனால் காரில் இருந்த மர்மநபர்கள் காரினை நிறுத்தாமல், வேகமாக துறையூர் நோக்கி சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து காரினை துரத்திச் சென்ற துறையூர் போலீசார் பாலக்கரை பகுதியில் காரினை மடக்கி பிடித்தனர்.

பின்னர் காரில் இருந்தவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராமாராம் தேவவாசி (வயது 38), மனோகர் சேசன் (29) என்பதும், அவர்கள் இருவரும் பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை திருச்சிக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதனை அடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கார் மற்றும் காரினுள் இருந்த சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 575 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். துறையூரில் ஒரே நாளில் சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com