கடையநல்லூரில் அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

கடையநல்லூரில் அரசு பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரம் வடக்குவிளை தெருவை சேர்ந்தவர் முருகையா (வயது 40). இவர் நேற்று இரவு கடையநல்லூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது தென்காசியில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ் முருகையா மீது மோதியது. இதில் பேருந்து சக்கரத்தில் சிக்கி முருகையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையநல்லூர் போலீசார் முருகையா உடலை கைப்பற்றி கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com