அரசு பஸ் கண்ணாடி உடைப்பு- போலீஸ் விசாரணை

பென்னலூர்பேட்டையில் இருந்து திருவள்ளூர் நோக்கி தடம் எண் டி.41-ஏ அரசு பஸ் நேற்று காலை திருவள்ளூர் நோக்கி வந்துக் கொண்டிருந்தது.மர்ம நபர்கள் பஸ்ஸின் பின்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அரசு பஸ் கண்ணாடி உடைப்பு- போலீஸ் விசாரணை
Published on

ஆவடி:

திருவள்ளூர் அடுத்த பென்னலூர்பேட்டையில் இருந்து திருவள்ளூர் நோக்கி தடம் எண் டி.41-ஏ அரசு பஸ் நேற்று காலை திருவள்ளூர் நோக்கி வந்துக் கொண்டிருந்தது. அப்பொழுது புல்லரம்பாக்கம் பஜாரில் பஸ் வந்து நின்றபோது மர்ம நபர்கள் பஸ்ஸின் பின்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுதொடர்பாக பஸ் கண்டக்டர் ஹேமநாதன் (வயது 29) புல்லரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com