தேசிய விவசாயிகள் தினம்- ஜி.கே.வாசன் வாழ்த்து

நாட்டின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்தில் மத்திய, மாநில அரசுகள் பெரும் கவனம் செலுத்த வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்
Published on

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

விவசாயத்தின் முன்னேற்றத்திற்காகவும், விவசாயிகளின் வளர்ச்சிக்காகவும் ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தி விவசாயிகளின் பாதுகாவலராக விளங்கிய இந்தியாவின் 5-வது பிரதமர் சவுத்ரி சரண் சிங் பிறந்தநாளை நினைவுகூறும் வகையில் விவசாயிகளை கவுரவிக்கும் வகையில் வருடந்தோறும் அவர் பிறந்த தினமான டிசம்பர் 23-ந் தேதியை விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

விவசாயிகள் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குகின்றனர். நாட்டு வருமானத்தின் பெரும்பகுதி விவசாயத்தின் மூலமே அரசிற்கு கிடைக்கிறது. நாட்டின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்தில் மத்திய, மாநில அரசுகள் பெரும் கவனம் செலுத்த வேண்டும்.

அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ வேண்டும். “தேசிய விவசாயிகள் தின”த்தில் விவசாயம் வளர்ந்திடவும், விவசாயிகள் வாழ்வு செழித்திடவும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com