செஞ்சி சக்கராபுரத்தில் ரூ. 7 லட்சம் செலவில் சிறுவர் பூங்கா- அமைச்சர் திறந்து வைத்தார்

அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு சிறுவர் பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
சிறுவர் பூங்காவை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார்
சிறுவர் பூங்காவை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார்
Published on

செஞ்சி:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி சக்கராபுரம் குளக்கரை அருகில் உள்ள சிறுவர் பூங்கா பராமரிப்பின்றி இருந்தது.

இதையடுத்து செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவராக மொக்தியார் மஸ்தான் பொறுப்பேற்றவுடன் சக்கராபுரத்தில் உள்ள சிறுவர் பூங்காவை புனரமைக்கப்பட்டு சிறுவர்கள் மற்றும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனதெரிவிக்கப்பட்டது. அதன்படி சக்கராபுரம் சிறுவர் பூங்காவில் 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 7 லட்சம் மதிபீட்டில் புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டடு புல் செடிகள் அமைத்தல், அழகிய மின்விளக்குகள் பொருத்துதல், சிறுவர்கள் விளையாடுவதற்கு விளையாட்டு உபகரணங்கள் பொருத்தும் பணி நடைபெற்று சிறுவர் பூங்கா திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். வார்டு கவுன்சிலர் மோகன் வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு சிறுவர் பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இதில் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், மாவட்ட விவசாய அணி அஞ்சாஞ்சேரிகணேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி மணிவண்ணன்நகர அவைத் தலைவர் பார்சு துரை, அரசு வழக்கறிஞர் கிருஷ்ணன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சங்கர், சிவகுமார், நூர்ஜகான் ஜாபர், உதவி செயற்பொறியாளர் சுப்பிர மணியன், வார்டு செயலாளர் தனசேகரன், நிர்வாகிகள் ஜாபர், தொண்டரணி பாஷா, சிவகுரு, மொபின், அல்லா பகஷ், காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com