

செஞ்சி:
செஞ்சி கூட்டுரோடு பகுதியில் வேன், ஆட்டோ டிரைவர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா கலந்துகொண்டு , அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் வேண்டும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் பொதுமக்களுக்கு முக கவசங்களையும் அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் தங்கம், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பலராமன், கஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் விக்கிரவாண்டியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் போலீசார் செல்வகுமார், அன்பு உட்பட பலர் உடன் பங்கேற்றனர்.