வண்ணாரப்பேட்டையில் சாப்பாடுக்கு பணம் கேட்டதால் ஓட்டலை சூறையாடிய கும்பல்

ஓட்டலில் இருந்த பொருட்களையும் நொறுக்கி சூறையாடினர்.ராஜேந்திரன் தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
வண்ணாரப்பேட்டையில் சாப்பாடுக்கு பணம் கேட்டதால் ஓட்டலை சூறையாடிய கும்பல்
Published on

ராயபுரம்:

வண்ணாரப்பேட்டை ஜே.பி.கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அதே பகுதியில் பாஸ்ட்புட் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த கொருக்குப் பேட்டையைச் சேர்ந்த அண்ணன்-தம்பியான தினேஷ், அஜித் ஆகியோர் சாப்பிட்டனர். பின்னர் சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றனர். இதனை ராஜேந்திரன் கண்டித்தார்.

இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் தினேசும், அஜித்தும் அங்கிருந்து சென்றுவிட்டனர். சிறிது நேரத்தில் கூட்டாளிகளுடன் வந்த அவர்கள் ஓட்டலுக்குள் புகுந்து உருட்டு கட்டையால் அங்கிருந்த ஊழியர்கள் சரமாரியாக தாக்கினர். ஓட்டலில் இருந்த பொருட்களையும் நொறுக்கி சூறையாடினர்.

இதனை கண்டு ஓட்டலில் இருந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓடினர். இந்த தாக்குதல் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

இதுகுறித்து ராஜேந்திரன் தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப்பதிவு செய்து தினேஷ், அஜித் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com