தூத்துக்குடியில் மீனவர் அடித்து கொலை

தூத்துக்குடியில் மீனவர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? அவருடன் மதுக்குடித்தவர்கள் யார்-யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கொலை
கொலை
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி தாளமுத்துநகர் சமர்ரியாஸ் நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 31), மீனவர். இவரது மனைவி இளையரசி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் தூத்துக்குடி முருகேசன் நகர் அருகே உள்ள காட்டுப்பகுதியில் இன்று காலை அலெக்ஸ் இறந்துகிடந்தார். அவரது தலையில் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

இதைப்பார்த்து அங்கு சென்றவர்கள் உடனடியாக சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அப்போது அங்கு மதுபாட்டில்கள் மற்றும் டீசல் கேன்களும் கிடந்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நேற்று இரவு அலெக்ஸ் நண்பர்களுடன் மது குடிக்க சென்றதும் அப்போது ஏற்பட்ட தகராறில் கற்களால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

அவர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? அவருடன் மதுக்குடித்தவர்கள் யார்-யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com