மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - மீனவர் பலி

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டு மீனவர் பரிதாபமாக இறந்தார்.
மாமல்லபுரம் விபத்து
மாமல்லபுரம் விபத்து
Published on

மாமல்லபுரம்:

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் தேவனேரி மீனவர் பகுதியை சோந்தவர் பரதன் (வயது 32). இவர், மீனவர். நேற்று முன்தினம் ஒரு வேலை விஷயமாக தனது மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக கல்பாக்கம் சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

மாமல்லபுரம் புறவழிச்சாலை வழியாக அதிவேகத்தில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயம் அடைந்த பரதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மாமல்லபுரம் போலீசார் பரதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை தரமணி தந்தை பெரியார் நகர் புத்தர் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 47). புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விஜய நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பணி முடித்துவிட்டு அதிகாலை 2 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் தரமணி 100 அடி சாலை வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்குள்ள தனியார் ஏ.டி.எம். அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்புச்சுவரில் மோதியதில் தூக்கி வீசப்பட்டார்.

இதில், தலை மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அறிந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com