

பொன்னேரி:
பொன்னேரி அருகே உள்ள செம்பாசிப்பள்ளி குப்பம் மீனவ கிராமம் இங்கு வசிக்கும் ஆறுமுகம் மகன் அன்பரசன் 22 மற்றும் தேசப்பன் மகன் தேனரசன் 22 ஆகிய 2 பேர் மீனவர்கள் செம்பாசிப்பள்ளிகுப்பம் கடல் மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களான இவர்கள் இரண்டு பேரும் தமிழக அரசின் மீன்வளத் துறை பதிவுபெற்ற படகில் மீன்பிடிக்க தொழிலுக்காக நேற்று முன்தினம் அதிகாலையில் சென்றனர் மீன் பிடித்த பின்னர் அன்பரசன் மற்றும் தேனரசன் படகில் முகத்துவாரம் அருகே கடலில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது படகின் என்ஜின் கோளாறு ஏற்பட்டது கடலில் ராட்சத அலையில் சிக்கி படகு விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது பின்னர் இருவரும் கடலில் நீந்த முடியாமல் தவித்த நிலையில் அன்பரசன் பரிதாபமாக இறந்த நிலையில் ஸ்ரீஹரிகோட்டா அருகே கடற்கரையில் உடல் கரை ஒதுங்கியிருந்தது மற்றொரு மீனவரான தேனரசன் காலில் காயங்களுடன் கரையில் தவித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் செம்பாசிபள்ளிகுப்பம் மீனவர்கள் கடலுக்குச் சென்ற 2 பேர் வீடு திரும்பாததால் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு 15 பைபர் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று அன்பரசன் மற்றும் தேனரசனை தேடிக்கொண்டிருந்தனர் தொடர்ந்து ஸ்ரீஹரிகோட்டா அருகே கடற்கரையில் ஒருவர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு அங்கு சென்றபோது செம்பாசிபள்ளிக்குப்பம் மீனவன் தேனரசன் என்பது தெரியவந்து பின்னர் அவரை மீட்ட நிலையில் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் அருகே உள்ள கடற்கரையில் அன்பரசன் உடல் கரை ஒதுங்கி இருப்பது கண்டறியப்பட்டது.
தகவல் அறிந்த திருப்பாலைவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கரை ஒதுங்கி கிடந்த மீனவர் அன்பரசன் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் செம்பாசிபள்ளிகுப்பம் மீனவ கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.