

ராயபுரம்:
சென்னை காசிமேடு சிங்கார வேலன் நகரை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 29). இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார். திருமணமானவர். சம்பவத்தன்று மீனவர் சுரேந்தர் காசிமேடு பகுதியில் உள்ள கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை மீன்பிடி துறைமுகத்தில் பழைய ஏலம் விடும் இடத்தில் அவரது உடல் ஒதுங்கியது. இதை பார்த்த அப்பகுதி மீனவர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுரேந்தர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சுரேந்தர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். குடும்ப பிரச்சினையால் அவர் தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.