இரு சக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு

வாகனத்தில் இருந்த கண்ணாடி விரியன் பாம்பை சுமார் ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு பாம்பை உயிருடன் மீட்டனர்.வாகனத்தில் சீட் பின் பகுதியில் கண்ணாடி விரியன் பாம்பு இருந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இரு சக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு
Published on

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ராசிபுரம் பிரிவு ரோட்டில் ஒருவர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கடைக்கு சென்று விட்டு மீண்டும் தனது வாகனத்தை எடுக்க வந்தார்.

அப்போது அங்கு இருந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் சீட் பகுதியில் பாம்பு சென்றதை பார்த்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவர் ஆத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இருசக்கர வாகனத்தில் இருந்த கண்ணாடி விரியன் பாம்பை சுமார் ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு பாம்பை உயிருடன் மீட்டனர். பாம்பை மீட்டவுடன் இருசக்கர வாகன ஓட்டி நிம்மதி அடைந்தார். பின்னர் உயிருடன் பிடித்த பாம்பை தீயணைப்புத் துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

இருசக்கர வாகனத்தில் சீட் பின் பகுதியில் கண்ணாடி விரியன் பாம்பு இருந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com