சோழிங்க நல்லூரில் மருந்தகத்தில் தீ விபத்து

கடையில் இருந்த ஏராளமான மருந்து பொருட்கள் எரிந்து நாசமானது.மின்கசிவு காரணமாக இந்த தீவித்து ஏற்பட்டதாக தெரிகிறது.
சோழிங்க நல்லூரில் மருந்தகத்தில் தீ விபத்து
Published on

சோழிங்கநல்லூர்:

சோழிங்கநல்லூர், பொன்னியம்மன் கோவில் முதல் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வம். இவர், ஓ.எம்.ஆர்.ராஜீவ் காந்தி சாலை, எம்.ஜி.ஆர். தெரு சந்திப்பில் மருந்தகம் நடத்தி வருகிறார்.

வியாபாரம் முடிந்ததும் வழக்கம் போல் மருந்தகத்தை பூட்டிச்சென்றார். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் மருந்தகத்தின் உள்ளே இருந்து கரும்புகை வெளியேறியது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தமிழ்ச்செல்வனுக்கும் துரைப்பாக்கம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் கடையில் இருந்த ஏராளமான மருந்து பொருட்கள் எரிந்து நாசமானது. சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான மருந்துகள் சேதம் அடைந்ததாக தெரிகிறது.

மின்கசிவு காரணமாக இந்த தீவித்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com