

சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குழக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை (வயது 49). இவரது மனைவி பத்மாவதி (45). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற பத்மாவதி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் பிச்சை பத்மாவதியை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து பிச்சை சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தார் போலீசார் காணாமல் போன பத்மாவதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.