மகள் காதலனுடன் சென்றதால் அவமானம் தாங்காமல் தந்தை தற்கொலை

15 வயது மகள் காதலனுடன் சென்றதால் அவமானம் தாங்காமல் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை
தற்கொலை
Published on

கொளத்தூர்:

சென்னை கொளத்தூர், கண்ணகி நகரை சேர்ந்தவர் அய்யப்பன் (47). கொத்தனாராக வேலை செய்து வருகிறார். அய்யப்பனுக்கு திருமணமாகி சீதா (40) என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.

இவரது கடைசி மகள் வில்லிவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று காலை கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவி மதியம் வரை வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர் மகளை தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து ராஜமங்கலம் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் விசாரணையில் சிறுமி பக்கத்து வீட்டில் வசிக்கும் கார் டிரைவர் குமார் (26) என்பவரை காதலித்து வந்ததும் நேற்று காலை கடைக்கு செல்வதாக கூறிவிட்டு குமாருடன் சென்றதும் தெரியவந்தது.

இந்த நிலையில் மகள் காதலனுடன் சென்றதால் அவமானம் தாங்க முடியாமல் அய்யப்பன் நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி சீதா இது குறித்து ராஜமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் அய்யப்பன் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து சிறுமியை தேடி வருகின்றனர். 15 வயது மகள் காதலனுடன் சென்றதால் அவமானம் தாங்காமல் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com