டி.எஸ்.பி.யை கண்டித்து திருப்பூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

காங்கேயம் டி.எஸ்.பி., மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
Published on

திருப்பூர்:

பிஏபி., வாய்க்காலுக்கு இடம் கொடுத்த விவசாயிகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த 16-ந்தேதி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது , போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி காவல்துறையினர் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது காங்கேயம் டிஎஸ்பி., பார்த்திபன் விவசாயிகளை தாக்கியதாகவும், இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகி ஈஸ்வரன் பலத்த காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே காங்கேயம் டி.எஸ்.பி., மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com