தேவாரத்தில் மின் வேலியில் சிக்கி விவசாயி பலி

தோட்டத்தில் யானை மற்றும் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க பால்பாண்டி தோட்டத்தை சுற்றி மின் வேலி அமைத்திருந்தார்.சூர்ய பிரகாஷ் தனது தோட்டத்துக்கு தண்ணீர் திறந்து விட சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின் வேலியில் அவரது கால் பட்டு தூக்கி வீசப்பட்டார்.
தேவாரத்தில் மின் வேலியில் சிக்கி விவசாயி பலி
Published on

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் தேவாரம் மல்லிங்கர் கோவில் தெருவைச் சேர்ந்த மணி மகன் சூர்ய பிரகாஷ் (வயது 30). இவருக்கு தேவாரம் மேற்கு மலையடிவாரத்தில் சொந்தமாக தோட்டம் உள்ளது. இதற்கு அருகே பால்பாண்டி என்பவருக்கும் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் யானை மற்றும் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க பால்பாண்டி தோட்டத்தை சுற்றி மின் வேலி அமைத்திருந்தார்.

நேற்று இரவு சூர்ய பிரகாஷ் தனது தோட்டத்துக்கு தண்ணீர் திறந்து விட சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின் வேலியில் அவரது கால் பட்டு தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இது குறித்து தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன சூரிய பிரகாசுக்கு பிரியங்கா என்ற மனைவியும் 1 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com