விவசாயியை வழிமறித்து தாக்கிய 3 பேர் கைது

விழுப்புரம் அருகே விவசாயியை வழிமறித்து தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே வளவனூர் போலீஸ் சரகம் தொந்திரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 62), விவசாயி. இவர் மோட்டார் சைக்கிளில் சிறுவந்தாடு மார்க்கமாக சென்றார். அங்குள்ள ரெயில்வே கேட்டைக் கடந்தபோது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கோலியனூர் கூட்ரோடு உதயன் (22), அரிகரன் (18), மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரில் ஒருவர் ரவியின் தோளை தட்டியுள்ளனர்.

இதை தட்டிக்கேட்ட ரவியை, 3 பேரும் சேர்ந்து திட்டி தாக்கினர். புகாரின் பேரில், வளவனூர் போலீசார் வழக்குப் பதிந்து உதயன் உட்பட 3 பேரையும் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com