கல்லூரியில் இருந்து நீக்கியதால் அதிர்ச்சி- என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

மதுரையில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

மதுரை:

மதுரை சோலை அழகுபுரம் திருப்பதி நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கார்த்திக் (வயது 22). இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றின் விடுதியில் தங்கி என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் அவரை கல்லூரி நிர்வாகம் திடீரென தற்காலிக நீக்கம் செய்தது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கார்த்திக் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஜெய்ஹிந்த் புரம் போலீசில் முருகன் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com