குன்னம் அருகே என்ஜினீயர் தற்கொலை- போலீசார் விசாரணை

குன்னம் அருகே தூக்குப்போட்டு என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள துங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் திருமேனி. இவரது மனைவி ராணி. இவர்களது மகன் அகத்தியன்(வயது 23). என்ஜினீயர். திருமேனி திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அகத்தியன் தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார்.

தற்போது அவர் மீண்டும் ஆந்திரா செல்வதற்காக ராணியிடம் பணம் கேட்டுள்ளார். இதையடுத்து ராணி பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். மையத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் மாடியில் அகத்தியன் தூக்குப்போட்டு பிணமாக தொங்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து ராணி கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அகத்தியனுக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாகவும், இதனால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்றும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com