பாவூர்சத்திரத்தில் ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயர் தற்கொலை

பாவூர்சத்திரத்தில் ரெயில்வே கேட் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் உடல் சிதறி இறந்து கிடந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வீ.கே.புதூர்:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் ரெயில்வே கேட் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் வாலிபர் ஒருவரின் உடல் 2 துண்டாக சிதறி கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த ரெயில்வே போலீசார் உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் நேற்று இரவு பாவூர்சத்திரம் வழியாக கேரளாவுக்கு சென்ற பாலருவி ரெயிலில் அடிபட்டு அந்த வாலிபர் இறந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் கடையம் அருகே உள்ள ஏ.பி. நாடானூரை சேர்ந்த சுரேஷ் (வயது30) என்பது தெரியவந்தது. சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்த சுரேஷ் பாவூர்சத்திரத்தில் மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். நேற்று இரவு தனது காரை ரெயில்வே தண்டவாளம் அருகே நிறுத்தி விட்டு அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்தாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com